கௌரிஈசன் அண்ணாவுக்கு!
அனைத்தையுமே அறியவைத்த செய்தித்தாள் நீ
அனைவரையும் நனைத்துநின்ற அன்புமழை நீ
புனைகதைகள் பேசாத போர்வாளும் நீ
புலம்பெயர்ந்த தமிழுலகில் போர்புரிந்தாய் நீ
பனைவடலி தென்னையெனப் பயன்பட்டாய் நீ
பண்பாட்டின் உறைவிடமாயத் திகழ்ந்தவனும் நீ
தனையழித்து மணங்கொடுத்த ஊதுபத்தி நீ
தாயாகிப் பலபேரைத் தாங்கியவன் நீ
உனைமட்டும் வேண்டுமெனில் தீகொள்ளக் கூடும்!
உன்நினைவைத் திருடவந்தால் தீயங்கு தோற்கும்!!
இரா.சம்பந்தன்