திருக்குறளில் ஒரு பழமொழி!
வாழ்க்கையில் ஒருவன் தாழ்ந்து கெட்டுப் போனால் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
நானும் காதலித்து அனைவரிடமும் மானம் கெட்டுப்போய்த் தாழ்ந்து இருப்பதால் தானோ என் நெஞ்சமே நீயும் என்னை விட்டுப் பிரிந்து காதலித்தவன் பின்னாலே போய்விட்டாய்?
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
(திருக்குறள் – நெஞ்சொடு புலத்தல் – குறள் 1293)
இரா.சம்பந்தன்