|

அப்பாவும் நானும்!

நான் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த காலம். என்னிடம் 9 வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தி என்னிடம் சேர் நான் 10 வது வகுப்புக்கு வந்ததும் பேச்சுப் போட்டில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை வாங்க நீங்கள் கட்டுரை எழுதித் தரவேண்டும் என்றாள்.

காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் எழுதிக் கொடுத்த கட்டுரைகளே தங்கப்பதக்கத்தை வென்றிருந்தன. சரி என்று நானும் வாக்குக் கொடுத்துவிட்டு அடுத்த வருடம் கல்லூரி கொடுத்த தலைப்புக்களில் ஒன்றான பொறுமையில் சிறந்தவன் தருமன் என்பதற்கு கட்டுரை எழுதிக் கொடுத்தேன்.

பொறுத்தல் என்பது போற்றாரைப் பொறுத்தல். எங்களை மதிப்பவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது உண்மையான பொறுமையல்ல எங்களை மதிக்காதவர்கள் செய்யும் தவறுகளையும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறுமை என்று சங்க இலக்கியத்தியத்தில் தொடங்கியது அந்தக் கட்டுரை.

அந்த ஆண்டு நடுவர்களிலே ஒருவராக எனது தந்தையார் பண்டிதர் இராசையா அவர்களும் இருந்திருக்கிறார்கள். அவரும் ஒரு நடுவர் என்பதோ கட்டுரை என்னுடையது என்பதோ எங்கள் இருவருக்குமே தெரியாது. ஆனாலும் முதல் பரிசைத் தன் பேச்சில் திறமை காட்டி எனது மாணவி வென்றுவிட்டாள்.

வீட்டுக்கு வந்த அப்பா இன்று கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஹம்சலா என்று ஒரு பிள்ளை பேசினாள் தம்பி. அது அண்ணாத்துரை கருணாநிதி எழுதிய வசனம் போல இருந்தது. என்ன தமிழ் என்ன குரல் என்று பிரமிப்போடு சொன்னார்.

அப்பா அது நான் எழுதிக் கொடுத்தது தான் என்றேன். சற்று நேரம் தலைகுனிந்து நின்று நின்ற அப்பா நான் தப்புப் பண்ணிவிட்டேன். உன்னை வீணாக விஞ்ஞான பாடம் படிக்கச் சொல்லி உன் முன்னேற்றத்தை பழுதாக்கிவிட்டேன் போவுது என்றார்.

இந்த அனுபவம் எனக்கு இருந்தால் என் பிள்ளைகளை படியுங்கள் என்று வற்புறுத்தினேனே ஒழிய இதைப் படியுங்கள் என்று சொல்லவில்லை.

இரா.சம்பந்தன்

Jun 21, 2026, 7:37 PM

Hi master this is Hamsala, thank you for sharing this memory. Where are you located now. One day I want to meet you if it’s possible. I really appreciate it still you remember my name.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.