|

ஆத்தி சூடியும் நான் உணர்ந்த உரையும்!


அறம் செய்ய விரும்பு

தருமத்தைச செய்யமுடியாவிட்டாலும் அதைச் செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்புங்கள். அப்படி விரும்பும் போது தீய எண்ணங்கள் தலைதூக்க மனத்தில் இடம் இல்லாமல் போகும்


ஆறுவது சினம்.

தருமம் செய்யும் போது ஒருமுறை உதவி கேட்டு வந்தவனே சிலவேளை திரும்பவும் வருவான். அப்போது கோபம் வரும். எனவே அதை அடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

இயல்வது கரவேல்

பெரும் உதவி கேட்டு ஒருவன் வந்தால் என்னால் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடாமல் உங்களால் இயன்ற உதவியை செய்து விடுங்கள்.

ஈவது விலக்கேல்

உங்களால் செய்ய முடியாத உதவியை இன்னொருவன் செய்ய முற்படும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் நினைக்காதீர்கள்

உடையது விளம்பேல்
உதவி கேட்டு வருபவன் உடுத்திருக்கும் ஆடையைப் பார்த்து அதுபற்றி விமர்ச்சிக்காதீர்கள்

ஊக்கமது கைவிடேல்

கிழிந்த ஆடையுடன் நெடுந்தூரத்தில் இருந்து ஒருவன் வந்து உதவி கேட்பது அது அவனின் வறுமையால் வந்த ஊக்கம். விடாமுயற்சி. அவனைக் கைவிட்டுவிடாமல் உதவி செய்யுங்கள்

எண்ணெழுத்து இகழேல்

இவரிடம் அனுப்பினால் இவனுக்கு உதவி கிடைக்கும் என்று எண்ணி ஒருவர் எழுதும் கடிதத்தை இகழ்ந்து ஒதுக்கி விடாதீர்கள்.

ஏற்பது இகழ்சி

நீங்களாவே முன்வந்து தருமம் செய்யாமல் பிறரின் அறிவுறுத்தலை ஏற்று நல்லது செய்தால் அப்படி ஏற்றுச் செய்வது இகழ்சிக்கு வழிவகுக்கும்

ஐயம் இட்டு உண்

ஒருவன் வறியவனா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு அவனுக்கும் உள்ளதைப் பகிந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்.

ஒப்புரவு ஒழுகு

உங்களது அறச் செயல்களை போற்றுபவனையும் தூற்றுபவனையும் ஒருசேரக் கொண்டது இந்த உலகம் எனவே அதை உணர்ந்து எல்லோரையும் அரவணைத்து நடந்து கொள்ளுங்கள்.

ஓதுவது ஒழியேல்

நல்ல காரியங்களை நான் செய்வேன் என்று உங்கள் மனத்துக்கு சொல்லுவதை நிறுத்தி விடாதீர்கள்.

ஓளவியம் பேசேல்

மற்றவர்கள் செய்தாலும் தருமம் தான் எனவே அவர்கள் மீது பொறாமை கொண்டு உங்களை உயர்த்திப் பேசாதீர்கள்.

அஃகஞ் சுருக்கேல்

அகத்தினை குறுகிய எண்ணங்களால் சுருக்கி வைத்திராமல் பரந்துபட்ட நல்ல எண்ணங்களால் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.