நன்னெறி காட்டும் கண்ணும் கண்ணீரும்!
நல்ல உள்ளம் உடைய உயர்ந்த மனிதர்கள் பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அதைப் பொறுக்க முடியாமல் நெருப்பிலே இட்ட மெழுகு போல தாங்களும் உருகி வருந்துவார்கள்.
பொறுத்துக் கொள்ள முடியாத நோயினால் ஒரு உடம்பின் பிற உறுப்புக்கள் துன்பமுற்று வருந்தும் போது கண் ஆனது எனக்கு என்ன வந்தது என்று பாராமுகமாக இருந்துவிடுவதில்லை. அது அந்த உறுப்புகளுக்காக தான் அழுது கண்ணீர் வடிக்கின்றது.
பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க – தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளை அணிந்திருப்பவளே! முற்றிய
நோயால் வருந்தும் பிற உறுப்புகளைக் கண்டு நீர் சொரியும் கண்
போல பெரியோர் பிறர் படும் துன்பங்களைக் கண்டு
நெருப்பிலிட்ட நெய் போல் உருகுவர்.
(சிவப்பிரகாச சுவாமிகளின் நன்நெறி 20)