|

தமிழன் வழிகாட்டி – செந்தி


பிறந்தநாள் வாழ்த்து!
அலையொதுங்கும் சருகெனவே ஆடி ஓய்ந்து
அமைதியுடன் இருப்பவர்கள் நிறைந்த நாடாம்
இலையொதுங்கப் பனிபொழியும் கனடா மண்ணில்
இன்றுவரை இயங்குகின்ற தமிழன் ஆமாம்!
முலையொதுங்கிப் பால்குடிக்கும் குழந்தை போல
முகம்மூடிக் கிடந்ததமிழ்ச் சாதிக் கிங்கே
நிலையொதுக்கி தந்தவொரு மனிதன் என்றால்
நினைவுவரும் செந்தியென மனதில் அன்றோ!

யாரோடும் பகையில்லா இனிய வாழ்க்கை!
யாழ்ப்பாணத் தமிழ்நாட்டுப் பண்பு! என்றும்
தேரோடும் வீதியைப்போல் திறந்த நெஞ்சம்!
தென்னகமும் போற்றுகின்ற முயற்சி யாளன்!
வேரோடும் தமிழ்வாழ்வை இந்த மண்ணில்
விதைத்தவரில் ஒருவனெனும் வரலா லொன்றை
ஊரோடு பேசவைத்த செந்தி என்னும்
ஒருமகனும் இடம்பெறுவான் வரலாற் றேட்டில்!

வழிகாட்டி என்னுமொரு வழியைக் காட்டி
வாழ்வியலைச் சுகமாக்கி கலைஞன் ஆகி
பழிகாட்டித் தூற்றுபவர் சிலரைக் கூடப்
பக்குவமாய் அரவணைத்துப் பொறுத்துக் கொண்டு
மொழிகாட்டும் தமிழனென விருது சூழ
முன்னெடுக்கும் முயற்சிபல! செந்தி ஓர
விழிகாட்டும் திசையினிலே காற்றும் மெல்ல
வீசுமொரு நாள்மிகவும் தொலைவில் இல்லை!
இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.