காற்றுவெளி முல்லை அமுதன்
காணாமல் ஒளித்தோடிப் போன நூல்கள்
கனகாலம் மறைந்திருக்க முடியா தென்றே
பூணாத போர்க்கோலம் பூண்டு தேடிப்
புத்தங்கள் அவைநெய்தார் பெயர்கள் மற்றும்
வீணாண காலங்கள் எல்லாம் ஒன்றாய்
விரல்நுனியில் இருந்திடவே திரட்டித் தந்தோய்!
பேணாமல் இருப்போமா? அமுதா முல்லைப்
பெரியவனே உன்பணியை என்றும் நாங்கள்!
வாணாளும் நிலையில்லாப் பிறவி வாழ்வில்
வரலாறாய் நிலைப்பவர்கள் உன்னைப் போல
தூணாக நின்றவர்கள் மட்டும் தானே
துரும்பெல்லாம் தோற்றுவிடும் அன்றோ ஆமாம்!