தமிழரங்கம். பா.ஞானபண்டிதன்
தமிழரங்கம். பா.ஞானபண்டிதன்
காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து
நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன்
பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக்
காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன்
ஓட்டிலே மறைந்தவென் ஆமைபோல் வாழ்வை
ஓடை நதியினில் உலவிடச் செய்தோன்
சூட்டிலே கலந்த சுடுசொல் விலக்கிச்
சோற்றிலே கலந்த தயிரெனக் குளிர்ந்தோன்
வீட்டிலே கிடந்தவென் எழுத்தெலாம் பறித்து
வித்தும் நிலமுமாய் ஆக்கியே தந்தோன்
கூட்டில் துயின்றவென் எழுத்தெலாம் இன்று
கோட்டில் நடக்கவே பழக்கியோன் வாழி!