|

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்
கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சே
கூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்
தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தே
வீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் – கலைஷன்
ஏச்சன்சி அடிக்குதே வேலைக்கு தினம்கோல்
ஓட்டுக்குள் ஆமைபோல் ஆனேன் – ஐயோ
ஓற்றுமை குடும்பத்தில் இல்லாமல் போனேன்
பிக்பொஸ் பார்க்கிறாள் வீட்டில் – சீரியல்
பிரியமாயப் பார்க்கிறாள் பிள்ளைகள் சாட்டில்
பக்கென்று சிரிக்கிறாள் பார்த்து – என்னைப்
பாய்ந்து கடிக்கிறாள் வார்த்தைகள் கோர்த்து
புக்பண்ணு டிக்கட்டை போறேன் – என்றே
புலம்பிச் சினக்கிறாள் சாப்பிட வாரேன்
அப்பனும் ஆத்தாளும் ஆனோம் – அது
அச்சிடெண்ட் என்கிறாள் இரக்கத்தைக் காணோம்
வேட்டிநான் வாங்கியது இல்லை – சேட்டு
வெள்ளையாய் போட்டதும் இல்லவே இல்லை
காட்டிலே கட்டிய தெல்லாம் – இந்தக்
கட்டிய பாவியின் கொழுப்புக்கு பில்லாம்
தாய்க்கு வாங்கினாள் பாவி – சொந்தத்
தமயனின் பேத்டேக்கு ஏரிஎம் இழுத்தாள்
நகைக்கடைச் சீட்டுக்கு என்றே – காசு
நானூறு வாங்கினாள் யாரிடம் சொல்ல
தப்புகள் செய்திடும் போது – யாரும்
தடுத்துமுன் வந்தெம்மைக் காப்பதும் இல்லை
தண்டனை வந்திடும் போதும் – தோளைத்
தருகிறேன் என்பவர் இல்லவே இல்லை!!
வாழ்க்கைத் துணையெனச் சொல்லும் – இந்த
வாளின் துணையினால் வந்ததோ காயம்
தாக்கத் தொடங்கினால் வாயால் – அந்தத்
தமிழைத் தாங்கவோர் தனிப்பலம் வேண்டும்
கட்டாத காட்டினால் தொல்லை – வீட்டில்
கட்டிய மனைவியோ அதைவிடத் தொல்லை!!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.