|

காலம் என்று வருமோ?


நான்பிறந்த தாய்நிலமும் இலங்கை தானடா
நன்றியில்லா இனமிரண்டு வாழும் தீவடா
வான்நிலவும் சுடுவெயிலும் காற்றும் தானடா
வாழ்வினிலே நேர்மையுடன் இருக்கும் அங்கடா
ஏன்பிறந்தோம் இங்கென்ற ஏக்கம் தானடா
எத்தனையோ சனங்களது நெஞ்சின் மீதடா
தேன்குளவி கடிப்பதுபோல் கதைகள் தானடா
கேட்டழுது துடிக்குமங்கே மனங்கள் தானடா
பொய்யரைக்கும் யூரூப்பின் சனல்கள் தானடா
புற்றீசல் போலங்கே நிறையக் காணடா
மைவரையும் கண்ணுடைய பெண்கள் தானடா
மயிர்தொடங்கி நகம்வரைக்கும் காட்டுதே யடா
கையிலென்றும் புத்தகங்கள் தொடாத நாயடா
கனசனலின் ஓணரென திரியுதே யடா
நெய்புழத்த மணம்போல ரி.வி. தானடா
நித்தமெங்கும் நாறுதடா தினமும் இங்கெடா
நல்லசெய்தி தருவதெலாம் நான்கு ஐந்தெடா
நம்செவியில் பூச்சுற்ற நாலு நூறெடா
கல்லுமனப் பாவிகளின் தொல்லை தானடா
கனசனலில் யூரூப்பில் நிறையக் காணடா
மெல்லப்பணம் சேகரிக்க இந்த வழியடா
மேலுமதன் லைக்கெல்லாம் இலட்சம் மேலடா
கொன்றுவிட்டார் யூரூப்பின் பணியைத் தானடா
கூட்டிவைக்கும் கறிக்குழம்பைக் காட்டித் தானடா
முயல்பிடிக்கும் நாய்களைத்தான் முகத்தில் தானடா
முன்னாலே தெரிந்துவிடும் அதனைப் போலடா
பயலிவர்கள் முகங்களைத்தான் ரி. வி. பாரடா
படிக்காத முட்டாள்கை மைக்ரோ போனடா
அயலவரை வாழவிடா இவர்கள் தானடா
அடியோடு ஒழிந்துவிடும் காலம் என்றெடா
செயலிகளைத் தடைசெய்து இவரைத் தாணடா
சிறைக்கனுப்பும் காலமது என்று தானடா?
இரா.சம்பந்தன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.