எனது தொகுதியில் தேர்தல்

 

புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டு
புதிதாகவே சனமும் வந்து – குடியேறி
புதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்று
புகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்
கதியாகவே பலரும்வந்து கதையாகவே பலதும்சொல்லி
களவாடிடும் வோட்டைத் தூர – எறியேனோ
மதியாதவர் தருமம்தன்னை மகிழாதவர் பிறரைக்கண்டும்
மனமானது கல்லாய்ப் போன – சிலர்கூடி
சதியாகவே ஒருவர்காலை சரியாகவே அடுத்தாள்வாரும்
சடங்கானதோ தேர்தல் இங்கே – கனடாவில்
பதியாகவே நாங்கள்பெற்று பயமானது எதுவும் அற்று
பழம்போர்த்துயர் வடுவும் தாங்கி – இனிதாக
அதிகாரிகள் எவரும்இன்றி அநியாயமோ அதுவும்இன்றி
அழகாகவே தமிழர் வாழும் – திருவூரில்
குதியாமலே பதவிக்காக குனியாமலே ஓட்டுக்காக
குறைதீர்த்திடும் மனிதன் வேண்டும் – முருகோனே
கொதியாமலே கூழுங்காச்சிக் குடியாமலே நாமும்போகும்
குறைதீர்க்கவே வருகமுருகப் பெருமாளே!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.