மேசையும் – ஆசையும்!!
கால்முறிந்த சாப்பாட்டு மேசை ஒன்றைக்
கண்டெடுத்துத் தூக்கிவந்து திருத்தி மேலே
நால்நிறத்து பொலித்தீனில் விரிப்பு போட்டு
நல்லதென வீட்டிலே மனைவி சொல்ல
தோல்கறுத்த இருகதிரை பழசாய் வாங்கி
தோதாக மேசையுடன் சேர்த்துப் போட்டு
கோல்கொடுத்து நண்பர்களை அழைத்து வீட்டில்
குழம்புகறி சோறுதின்றேன் மகிழ்ச்சி யோடு
எண்பதிலே காசுபணம் கையில் இல்லை
ஏறியதும் இறங்கியதும் பஸ்சிலே தான்
கண்ணயர்ந்தால் கவலையென எதுவும் இல்லை
காட்டுகளோ செல்போனோ வீடோ இல்லை
தண்ணியடி வெள்ளிசனி மறுநாள் கூட
தமிழ்கடையில் போன்காட்டு பில்லும் இல்லை
மண்ணிதிலே கனடாவில் வாழ்ந்த வாழ்வின்
மகிழ்ச்சியினைக் கெடுத்ததுவோர் ஆசை வந்து
புண்ணாகித் தள்ளாடும் பழைய மேசை
போகட்டும் வெளியிலென்று மனைவி ஏச
கண்ணாடி மேசையொன்று இருந்து உண்ண
கடனுக்கு வாங்கிவந்து வீட்டில் போட்டேன்
எண்ணாமல் ஏமாமாந்த அதற்குக் காசு
இன்றுவரை கட்டினான் களைத்துப் போனேன்.
தொண்ணூறு வரையிருந்து உதவி செய்தும்
தூக்கிவெளி எறிந்ததுபோல் இதுவும் இல்லை.
ஆடினினும் கால்முறிந்த பழைய மேசை
அதிலிருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி இல்லை
வாடிமுகச் சோர்வுடனே நானும் வீட்டில்
வட்டியுடன் வருகின்ற பில்லை அந்தச்
சாடிச்செடிப் படம்போட்ட புதிய மேசைச்
சாப்பாட்டின் அருகினிலே தினமும் பார்ப்பேன்
கோடிமுறை கைபிசைந்து கொட்டும் சோற்றை
குழைத்துண்ண முடியாமல் பில்லைப் பார்த்தே!