நீயும் – நானும்!
தீட்டிய பென்சிலின் கூரினால் எழுதிய
தேவதை போன்றவள் நீ
கூட்டிய முற்றத்தின் தூய்மையைப் போலொரு
கோலத்தைக் கொண்டவள் நீ
வாட்.டிய தோசையின் ஓட்டைகள் போலிரு
வடுக்களைக் கண்டவள் நீ
மூட்டிய நெருப்பினில் வரும்புகை போலவே
முழுமயிர் உடையவள் நீ
ஆட்டிய தொட்டிலிலில் கிடந்து சிரிக்கின்ற
அழகிய குழந்தையும் நீ
பூட்டிய கதவிலே தொங்கிடும் பூட்டென
பொழுதினைக் கழிப்பவள் நீ
நீட்டிய தெருவென நடந்திடும் தூரத்தை
நெடியதாய் ஆக்கினாய் நீ
ஓட்டிய வண்டிலின் மாடுகள் மணியென
ஒருமுறை சிரித்தவள் நீ
மாட்டிய ஆணியில் தொங்கிடும் சேட்டென
மனதையும் அலைத்தவள் நீ
பாட்டியின் பெட்டியில் வடையென உன்னைப்
பலமுறை நினைத்தவன் நான்
காட்டிலே நரிகையில் எடுத்துனைக் கொடுத்த
காக்கையும் ஆனவன் நான்!
இரா.சம்பந்தன்