ஓளவை சொன்ன ஒரு உண்மை!
ஒரு மனிதன் படித்திருந்தால் நல்லது. அப்படிப் படிக்க முடியாவிட்டாலும் பணத்தைத் அவன் தேடி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவனை எல்லோரும் வரவேற்றுப் போற்றி மதிப்பார்கள்.
அவனிடம் படிப்பும் இல்லை காசும் இல்லை என்றால் மனைவியும் அவனை விரும்பமாட்டாள். அவனைப் பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைக்கும் மதிப்பு இருக்காது.
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.
(ஒளவையின் நல்வழி – பாடல் 34)
இரா.சம்பந்தன்