நாலடியார் சொல்லும் நல்லவை நான்கு!

நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் ஒருவருடன் நட்பாக இருப்பதிலும் பார்க்க அவரை பகையாளியாக எண்ணி விலகிக் கொள்வது ஒருவனுக்கு நன்மை தரும்.
கடுமையான நோயுடன் தினமும் போராடிக்கொண்டு வாழ்வதை விட செத்துப் போவதே ஒருவனுக்கு நன்மை தரும்.
மற்றவர்களுடைய நெஞ்சு புண்ணாகி வருந்தும் அளவுக்கு இகழ்ந்து பேசுவதை விட அவர்களை ஒரேயடியாகக் கொன்று விடுதல் அவர்களுக்கு நன்மை தரும்.
ஒருவனிடம் இல்லாத நல்ல குணங்களைச் சொல்லி அவனைப் புகழ்ந்து ஏமாற்றுவதை விட முகத்துக்கு நேரே பழித்துப் பேசிவிட்டுப் போவதே இருவருக்கும் நன்மை தரும்.
தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் – அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.
(சமணர்களின் நாலடியார் – பொருட்பால் – நட்பு ஆராய்தல் – பாடல் 219)