புதிய ஆண்டும் புதிய பணியும்!
புதிய ஆண்டும் புதிய பணியும்!மண்ணுலகில் மனிதகுலம் அடைந்த வாழ்வும்மற்றதற்கு எதிரான தாழ்வும் நாளைஎண்ணுதற்குப் பழசென்றே ஆகிப் போகஎம்மிடையே உதிக்கிறது புதிய ஆண்டுகண்ணுறுப்பில் பனித்ததுளி துடைத்துக் கொண்டுகவலையினி இல்லையென நினைத்து நாங்கள்விண்ணிருந்து குதித்துவரும் புதிய ஆண்டைவிரும்புகிறோம் வரவேற்க உலகம் எங்கும்!போகவில்லை எங்குமெனச் செயலில் காட்டிப்போர்புரியப் பார்க்கிறது கொரணா இன்றும்சாகவில்லை அதர்மமெலாம் உலகில் என்றுசான்றெழுதித் தருகிறது உலகில் போர்கள்வேகவில்லைத் தம்பருப்பு என்ற கோபம்வீழ்த்திவிட்டு நிற்கிறது பலரின் வாழ்வைஆகமொத்தம் இவ்வாண்டும் புதிதாய் வந்துஆளவெமைப் போகிறது பழசு போன்றேநெஞ்சமதில் ஆசையெலாம் நியாயம் ஆனால்நிம்மதியும் நிலைத்திருக்கும் உலகில் நாங்கள்வஞ்சகத்தைத் துளியளவும் பிறர்க்குச் செய்யாவழிமுறையில் வாழ்கையினைக் கொண்டு சென்றால்நஞ்சுமிக்க மானுடர்கள் தோற்றுப் போவார்நாளடைவில் அன்புமிக்க மனங்கள் தோன்றும்அஞ்சுகின்ற மனிதகுல அவலம் தீர்க்கஅன்பினையே மருந்தென்று மதங்கள் சொல்லும்நீதியென்று சட்டமதைத் தூக்கிக் கொண்டுநெடுங்காலம் செய்ததெலாம் போதும் போதும்பாதியென்று அதைப்பிரித்து தருமம் சேர்த்துபக்குவமாய் உலகியலைக் கொண்டு சென்றஆதியினம் தமிழ்க்குடிகள் இன்று போலஅவலமுற்று வாழ்ந்ததில்லை என்ற உண்மைமீதியுள்ள உலகலொம் பரவும் வண்ணம்மேலுமொரு பணிபுரிவோம் வாரும்! வாரும்!!