யாழ்ப்பாணத் தமிழ்!
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார்.
அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர்இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப்பாணத்துத் தாய் தன் மடியில் இருந்த சிறு குழந்தைக்கு சரளத்தின் ஊடாக வானத்தில் தெரிந்த நிலவைக் காட்டி என்ன வடிவான நிலவு அங்கே பார் என்று சொன்னாளாம். அவர் அதிர்ந்து போனாராம்.
அழகு என்பதற்கு சரியான தமிழ் வடிவு என்பதே. ஏனென்றால் வடிவம் ஒன்றில் இருந்து தோன்றுவதால் அது வடிவு. அந்த உயர் தமிழை தாய் பயன்படுத்திய போது மடியில் இருந்த குழந்தை விளங்கிக் கொண்டு நிலவைப் பார்க்கின்றது. நான் வியப்போடு அதைப் பார்த்தேன் என்று என்னிடம் சொன்னார்.
உடனே நான் அவருக்குச் சொன்னேன். அவள் தமிழிச்சி. அவர்கள் தமிழர்கள். அவர்களின் இலக்கண நூலாகக் கற்பிற்கப்படுவது தொல்காப்பியம். ஆதனால் அந்த மக்கள் எங்களை விட உயர்வான தமிழைப் பேசுகின்றார்கள் என்று சொன்னேன்.
(கலைஞர் மு.கருணாநிதி ஒரு இலக்கிய விழாவில் பேசியது)