நிலவும் குளமும்!
நிலவு ஒன்று குளம் இறங்கிக்
குளிக்கப் போவுது
நீண்ட நாணல் புற்கள் காலைத்
மீன்கள் என்று கொக்கு கண்ணைக்
குனிந்து பார்க்குது
குளம் நிறைந்த தாமரைப் பூ
வெட்கம் கொள்ளுது
தென்னை இளம் கனி இரண்டு
நனையப் போகுது
மேகம் எனும் கூந்தல் அதைத்
தடுக்கப் பார்க்குது
காது மடல் கூந்தலை ஓர்
ஒழுங்கு செய்யுது
சின்ன விரல் நண்டினைப் போல்
நீரில் ஊருது
வெள்ளரிக் காய் துண்டு எனவே
உதடு மாறுது
அடுக்கி வைத்த முத்தினைப் போல்
பற்கள் தெரியுது
அரை உடலைக் குளம் இருக்கும்
தண்ணி மறைக்குது
மடல் உரித்த வாழை எனக்
கால்கள் தெரியுது
மனக் குரங்கு குளம் இறங்கி
நீந்தப் பார்க்குது
மனைவி மக்கள் வீட்டில் என்று
திரும்பிப் போகுது!