நான் தொலைத்த தீவாளி!
சீத்தைத் துணி கிழித்துச்
செய்துதந்த சட்டையை நான்
மாத்த மனம் இன்றி
தங்கைக்கும் அத் துணியில்
தானமையும் பா வாடை
எங்கும் புத் தாடை
இதுவெங்கள் தீ வாளி
கரும்பேன் பிடிக்கும் என்று
கழட்டென்பார் மழை வந்தால்
விரும்பாது புதுச் சட்டை
விழுமடிதான் தெறி அறுந்தால்
பிசங்காமல் மடித்து வைப்போம்
பிறகெலிகள் ஓட்டை யிட
கசங்காமல் வைத்த அது
கவலைதரும் எலி வெட்டால்
அப்பாக்கு பழம் வேட்டி
அம்மாக்கு ஒன்றும் இல்லை
தப்பாகி போகும் என்று
தவறாமல் ஆச்சிக்கு தான்
எடுப்பார்கள் ஒரு சேலை
எதிர்வீட்டுக்கு அது காட்ட
உடுக்காமல் அதை வைத்து
ஊர்முழுக்க அது காட்டும்
கள்ளைக் குடித்து விட்டு
கடிவாங்கி நாய் மிதித்து
உள்ளே வரும் அப்பு
உனக்கிந்தா முறுக்கு என்னும்
கூடைக்குள் நேற்று அடைத்த
கோழி குழம் பாகும்
வாடைச் சயிக்கி ளிலே
வந்திறங்கும் ஆட்டு இறைச்சி
வெய்யில் தாண்டிய பின்
வெளிக்கிடுவோம் படம் பார்க்க
ஐயோவென் தீ வாளி
அழிந்ததடா வெளி நாட்டில்!