நன்பனுக்கு ஒரு கடிதம்!
நண்பனே உனது காணிக்குள்
புத்தர் சிலையென்று
கேள்விப் பட்டேன்
நீயும் நண்பர்களும் உறவுகளும்
அதை எதிர்த்துக் கடுமையாகப்
போராடுவதாகவும் அறிந்தேன்.
உண்மையில் நானும் அந்தப்
போராட்டத்தில் கலந்து
கொண்டிக்க வேண்டும்
உன்னோடு சேர்ந்து
சிங்கள ஆதிக்கத்தை
அகற்ற முயன்றிருக்க வேண்டும்
எனக்குத்தான் அந்தக்
கொடுப்பனவு இல்லையே
என்னை மன்னித்துவிடு
எனது காணிக்குள் அதுவும்
நான் கட்டிய வீட்டில் வந்து
அத்துமீறிக் குடியிருந்து கொண்டு
வெளியேற மறுக்கும் ஒரு
தமிழனுக்கு எதிராக
கோட்டுக்கும் வீட்டுக்கும்
அலைவதிலேயே எனது காசும்
காலமும் செலவாகி விடுகின்றது!
ஆக்கிரமிப்பது அவன் மட்டுமல்ல
இவனும்தான் தான்செய்கின்றான்
இதிலே தமிழன் சிங்களவன்
என்ற வேறுபாடு இல்லை
இருவருமே இரக்கமற்றவர்கள் தான்!
என்னை மன்னித்து விடு!
இரா.சம்பந்தன்