தலை குனிந்தேன்!
பண்ணையிலே மாடுகளின் செவியைக் காட்டி
பயத்துடனே மகளென்னைப் பார்த்துக் கேட்டாள்
எண்ணுதற்கு நம்பரென்றால் சரிதான் ஆனால்
ஏன்காதில் துளையிட்டார் பாவம் என்றாள்
கண்மமணியே தொலைத்துவிடும் மாடு என்ற
காரணத்தால் துளையிட்டார் என்றேன் நானும்
புண்படுத்தி எம்காதில் ஓட்டை போட்டு
புதுமுறையில் சின்நம்பர் அதனை வைத்தால்
எண்ணதுவும் தொலையாதே சிரித்தாள் பிள்ளை
எதுவும்நான் பேசவில்லை குனிந்து கொண்டேன்!