சிமிலி கறுத்த இலாம்பு!
கோடை வெய்யில் கொதிக்குதடி
குளிக்க வாடி
ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்
அங்கும் போரா
கூடையிலே கிழங் கிருக்கு
அவித்துத் தாடி
தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்
இப்ப வேண்டாம்
மோர் கடைய மத்திருக்கு
கிண்ணம் தாடி
கடைந்த வெண்ணை முடியவில்லை
பிறகு பார்ப்போம்
கரி பட்டுக் கறுக்குதடி
சிமிலி லாம்பு
சரிவந்து படு அருகில்
அணைத்துக் கொள்வோம்