சந்தையில் தேடிய காதல்!
உன் காதலை இழந்த பின்பு
நான் காதலித்த பெண்கள் பலர்
அவர்கள் உன்னைவிட அழகானவர்கள்
ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள்
உன்னிடம் அடைந்த தோல்விக்கு பின்னர்
எந்தக் காதலிலும் நான் தோற்றது கிடையாது.
அந்த வெற்றிகள் எனக்கு மகிழ்ச்சி தரவில்லை
காதலில் என்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அதிகம்
எத்தனையோ காதலிகளின் கண்ணீரைப் பார்ததேன்
அவர்களில் சிலரின் கோபத்தைப் பார்ததேன்.
பொம்பிளைப் பொறுக்கிப் பட்டமும் கிடைத்தது
இதனால் உன்மீது கொண்ட காதல் மட்டும்
பொய்யானது என்று நினைத்து விடாதே
உன்னால் என்காதல் மறுக்கப்பட்ட போது
உன்னைவிட அழகானவளை கட்ட வேண்டும்
என்ற தார்மீகக் கோபம் எனக்கும் வந்தது
அதனாலே இந்தக் காதல் கூத்துக்கள்
சந்தைப் பொருள்போலப் பெண்களைத் தேடினேன்.
சந்தித்த யாருமே உன்போல இல்லையே
ஏற்றுக் கொண்ட அவர்களைக் காட்டிலும்
எடுததெறிந்தவுன் அன்புதான் நிலைத்ததே!