|

காதலுக்கும் நேரம் கொடு!

கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும்

கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல

முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி

மூடிக்கொண்டு கிடக்குதடி நீண்ட நேரம்

வட்டிக்கடன் கரைப்பதுபோல் பனியை உப்பு – முக

வாட்டமுடன் கரைக்குதடி மெதுவாய் எங்கும்

குட்டிப்பிள்ளை எங்களது நாயும் சோபா – ஏறிக்

குதிக்கமனம் இல்லாமல் கிடக்கு பாராய்

தட்டிக்கொண்டு நிக்கின்றாய் ரொட்டி இப்போ – பசியில்

தட்டுக்கொண்டு அலையவில்லை நானும் வந்து

தொட்டுக்கதை பேசிக்கட்டில் போர்வைக் குள்ளே – நீயும்

தூங்கிடனும் செல்போனைக் குறைத்துக் கொண்டு

தொட்டில்சுகம் தேடுகின்ற இந்த நேரம் – நீயும்

தோய்ந்துவிட்டு தலைதுடைத்தால் என்ன வாழ்க்கை?

விட்டுக்கொடு காதலுக்கும் கொஞ்ச நேரம் – மற்ற

வீட்டுவேலை அனைத்தையும்நாம் நாளை பார்ப்போம்!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.