கனடாவுக்கு வாழ்த்து!
நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி
நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று
இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து…
இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து
மழைநனைந்து வளர்ந்தபயிர் போல நாங்கள்
மகிழ்வோடும் செழிப்போடும் வாழும் வண்ணம்
விழைவுகளைப் பொருட்படுத்தா துதவி செய்ய
வேறெவர்தான் உடன்படுவார் கனடா நாடே!
பழையதெலாம் தொலைத்துவிட்ட தமிழர் சாதி
பக்குவமாய் அதைமீண்டும் தேடிக் கொள்ள
பிழைகுறைந்த வழிகாட்டும் கனடா நாடே!
பெற்றவள்போல் நிற்பவளே வாழி! வாழி!