இலங்கையும் இயற்கையும்!
இது இனப்பிரச்சனை அல்ல
அழிவுகளைக் கண்டு
இருவரும் மகிழ்வதற்கு!
மொழியும் அழுகையும்
வேறாக இருப்பினும்
அவலம் ஒன்றாகவே
எங்கும் இருக்கின்றது.
வேண்டுதல் ஒன்றாகவே
வைக்கப்படுகின்றது.
வேவ்வேறு இறைவனிடம்
எங்கும் வெள்ளம்!
மொழிகள்
நனைக்கப் படுகின்றன்றன
இதிலே மகிழ்ச்சிக்கு
இடமில்லை!
ஏதாவது செய்தே
ஆகவேண்டும் உடனடியாக!
ஆனால் காருக்கு
நாற்பது டொலக்கு
பெற்றோல் போட்டால்
நாளைச் சாப்பாட்டுக்கு
என்ன செய்வது?
வெளிநாடு வந்தும்
இப்படித்தான் கலங்கும்
இதயங்களில் தானே
இத்தகைய கவிதைகளும்
பிறக்கின்றன
கவிதைகளை மட்டும்
வைத்துக்கொண்டு
என்னதான் செய்யலாம்?
இரக்கமற்ற மனிதர்கள்
என்ற பட்டத்தை
ஏற்றுக் கொண்டு
மௌனமாகப்
புலம்புவதைத் தவிர!