நானும் என்நாணும்
நானும் என்நாணும்
ஏதுமற்ற என்மீது
உளிகள் பாய்ந்து
உளம்; வலிக்கிறது…
ஏச்சும் பேச்சும் எதிர்ப்புமென
என்மீது வக்கணைகள்
வாளும் ஈட்டிதளும் என்மேல்
வந்துவிழுகின்றன….
பண்பட்டிருந்த போதும்
புண்பட்டுத் துடிக்கின்றேன். என்
கண்துடைக்கும் கைகளோ வெகுதொலைவில்
குரங்கு பிய்த்த கூட்டிலிருந்து
குறிதப்பி வந்த குற்றம்
கொடுமை புரிகிறது…
நாணுகிறேன் என் நிலைக்கு.
கோடியாய் துயர் வரினும்
நம்பிக்கை கொள்ளுகிறேன்….
உலைக்களத்தில் உருகுகின்ற
இரும்புதானே
இன்னொன்றாய் எழுகிறது!
இரா சிவசக்தி