அதுதான் துன்பம்!
துரைவீதி ஒழுங்கையிலே வேலி ஓரம்
தூரத்தே வெள்ளைநிற பெஞ்சுக் காரைக்
அரைவேட்டி கோவணத்து அப்பு கண்டு
அயல்பதுங்கி நின்றதொரு காலம் மாறி
திரைபோட்ட அலைகடலைத் தாண்டி வந்து
திக்கற்ற கவலையெலாம் நீங்கி நாங்கள்
தரைமீது தார்போட்ட வெளிநா டெல்லாம்
தங்கநிற பெஞ்ஸ்காரை ஓட்டு கின்றோம்
நிரையாக நிக்குதடா வீடு தோறும்
நெடுந்தூரம் சென்றுவர பெஞ்சுக் கார்கள்
நரைவேட்டி அப்புதான் அருகில் இல்லை
நாமந்தக் காரேற்றி ஓட்டிச் சென்று
குரையாத நாயாக ஊரில் வாழ்ந்த
குறைதீர்க்க எம்மருகே அதுதான் துன்பம்!
இரா.சம்பந்தன்.