மறக்குமோ நெஞ்சம்? December 11, 1882
கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்
கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்
தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்
தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கி
வைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகி
வாழ்வியலும் தோற்றுவிட்ட போதும் நெஞ்சைப்
பொத்திவைக்கா தெழுந்தோடிப் புறத்தே சிந்திப்
புதுவடிவம் புதுமரபு பொறித்து நீட்டிப்
பத்திரிகைத் உலகினுக்கே பாடம் சொன்ன
பாரதியை மறந்திடுமோ நெஞ்சம் என்றும்!
இரா.சம்பந்தன்