ஏன் நாங்கள் அழுவதில்லை?
ஏன் நாங்கள் அழுவதில்லை?
மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தாயின் கருவிலே இருக்கும் காலம் முடிவுக்கு வரும்போது குழந்தைப் பருவம் ஆரம்பிக்கின்றது. அதன் உண்மைத் தன்மை என்னவென்றால் கருவாக இருக்கும் காலம் இனி இல்லை அது செத்துவிட்டது.
அது போல ஒரு கட்டத்தில் குழந்தைப் பருவமும் செத்து எங்களைப் பாலப் பருவம் வந்தடைகின்றது. இதுவும் செத்து காளைப்பருவம் வருகின்றது. அதுவும் செத்து காம உணர்விற்கு ஆட்படும் இளமைக்காலம் வந்தடைகின்றது. அதுவும் நீடிக்காமல் செத்து முதுமைப்பருவம் சீக்கிரமே வந்து சேர்ந்துவிடுகின்றது.
இப்படியாக மனித வாழ்விலே எங்களுக்குள்ளேயே பல சாவுகளை பல கட்டங்களில் சத்தித்துக் கொண்டும் அதற்காக கவலைப்பட்டு எங்களுக்காக அழாமல் அடுத்தவன் செத்துவிட்டான் என்று அடுத்தவனுக்காக அழுகின்றோமே இது மடமைத்தனம் அல்லவா?
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ?
( பௌத்த இலக்கியம் குண்டலகேசி – பாடல் 9 )
இரா.சம்பந்தன்