வெட்டிய வாக்கியம் நான்!
இன்று நீ எங்கோ இருக்கிறாய்!
நான் இங்கே இருக்கிறேன்!
வெட்டிய வாக்கியம் போல!
எழுதிய நீயே வெட்டினாய்
தேவை இல்லை என்று!
எனக்குத் தெரியும்
தேவையில்லை என்றுதான்
வெட்டியிருப்பாய்! ஆனால்
பொருள் இல்லையென்று
வெட்டியிருக்கமாட்டாய் நீ!
கருத்தில்லாத எதையும்
எழுதுவதில்லையே நீ
தேவையில்லாமல் போனாலும்
கவலையில்லை!
ஒரு காலத்தில் தேவைப்பட்ட
கருத்தொன்றைச் சுமந்து கொண்டு
உன் வாக்கியமாக
இருந்துவிட்டுப் போகிறேன் நான்!