வாழையும் ஈகையும்!
அம்மா சுவையான கனியைக் கொடுத்தாள். நன்றியில்லாமல் அவளை வெட்டிக் கொன்று விட்டார்கள் என்று நினைத்து வாழைக்கன்று கனி கொடுக்காமல் விடுவதில்லை. தானும் கனியைக் கொடுத்து அன்னையைப் போல வெட்டுப்பட்டு இறந்து போகின்றது.
அது போல நல்ல குடும்பத்திலே பிறந்த பிள்ளைகள் இருந்த செல்வத்தை அப்பா இல்லாதவர்களுக்கு கொடுத்து வறியவன் ஆகி அழிந்து போனான் என்று தெரிந்து கொண்டும் யாராவது உதவி கேட்டு வந்தால் மறுக்காமல் உதவி செய்வார்கள். அதனால் வறுமை வந்தாலும் அஞ்ச மாட்டார்கள்.
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ—பைந்தொடீ
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.
(நன்னெறி – துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் – பாடல் 17)
இரா.சம்பந்தன்