மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது
உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது. தமது தெய்வத்தை உணர்த்தி மக்களை அழைப்பதற்குப் பதிலாக பணம் காட்டியும் பதவி காட்டியும் மக்களின் ஏழ்மை நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியும் இந்த ஆட்சேர்ப்பு நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்திலும் இது பற்றி ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியிருக்கின்றது.
அன்று திருநாவுக்கரசர் மதம் மாறியதற்கு சரியான ஒரு காரணத்தைச் சேக்கிழார் தனது பெரிய புராணத்திலே சொன்னார். அதுவே இன்றும் மதம் மாறுவோருக்கும் பொருந்தும். எனவே நாம் அவர்கள் மீது வெறுப்போ கோபமோ அடையக்கூடாது.
நல்ல வாழ்வு நெறிக்கு உரியது சைவ சமயம் என்ற உண்மையை அறிந்து உணர்ந்து அதைப் பின்பற்றுவதற்கு எங்களுடைய சிவபெருமான் அருள் செய்யாமல் போகட்டும் இவர் என்று கைவிட்ட காரணத்திலே தான் நாவுக்கரசர் சமண சமயம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது என்று எழுதினார் சேக்கிழார்.
அதுவே இன்றும் நடைபெறுகின்றது. இதில் நாம் வருத்தப்பட ஒன்றுமில்லை.
நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் எனத்துறந்து சமயங்கள் ஆனவற்றின்
நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளா மையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார்.
(பெரியபுராணம் – திநாவுக்கரசு நாயனார் புராணம்)