தொற்று நோயும் ஒளவையின் எச்சரிக்கையும்!
எந்த வகையாக ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடம்பு பல நோய்களும் பொல்லாத நுண் கிருமிகளும் இலகுவாகத் தொற்றிக் கொள்ளும் ஒரு வீடு போலத்தான் இருக்கின்றது. அதனாலே அறிவுள்ளவர்கள் அதனால் வரக் கூடிய துன்பத்தை உணர்ந்து தாமரை இலையிலே தண்ணீரைப் போல கூட இருப்பவை எதிலுமே ஒட்டிக் கொள்ளாமல் பிரிந்து இருந்து தங்கள் உடலைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்வார்கள். பிறரிடம் அது பற்றிப் பேசுவதால் என்ன பயனும் இல்லை என்பதை அறிந்து அவர்கள் அது பற்றி எதுவும் கதைக்கமாட்டார்கள்.
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை – நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
(ஒளவையின் நல்வழி பாடல் 7)