செய்கைகள் ஒன்றானாலும் நோக்கங்கள் வேறானவை!
நாயும் வாலை ஆட்டுகின்றது. பூனையும் வாலை ஆட்டுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கங்களோ வேறுபட்டவை. நாய் வாலை ஆட்டுவது நன்றிக்காக! பூனை வாலை ஆட்டுவது எதையோ வேட்டையாடுவதற்காக! எனவே வாழ்க்கையில் சிலரின் செய்கைகள் ஒன்று போலத் தெரிந்தாலும் அந்தச் செயல்களுக்கான நோக்கங்கள் என்ன என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
புலவர் கீரன் கம்பராமாயணப் பேருரையில் சொன்னது.