இறையாகவே நிற்கும் காலம் இது தானோ?
இறையாகிய உணர்வைத் தந்து
இயல்பாகிய உணர்வும் கொண்டு
முறையாகவே சமயம் காத்த – முதல்வேந்தர்
பிறைசூடிய முதலும் நீலப்;
பிளம்பாகிய இறையும் தன்னில்
நிறைந்தோங்கிட வாழ்ந்த எங்கள் – இறைபாபா
சிறைபோலுயர் துயரம் நீக்கி
சிறகாகவே இருந்தும் காத்து
குறையாமலே அருளும் செய்த – தவயோகி
துறையானதொரு கல்விக் காக
துணையாகவே மருந்துக் காக
அறையாலுயர் மாடம் கண்ட – மறையோனை
கறையாலுயர் கண்டம் மற்றும்
கரமேந்திய சூலம் கொண்ட
பொறையாலுயர் தெய்வம் வந்து – அழைப்பானோ
திறையாகவே தம்மை ஈய்ந்து
திரளாகவே கூடி ஏங்கி
உறையாகவே நிக்கும் எம்மை – அறிவானோ
பறையாமலே மௌனம் காக்கும்
பதமேயெமை விடுத்து பாபா
இறையாகவே நிற்கும் காலம் – இதுதானோ?