இரா.சம்பந்தன் கவிதைகள் 1
காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்
மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்
வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாம்
வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்
ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டை
ஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்
தொட்டவிரல் நிறந்தீட்டிக் கொள்வாய் நீயும்
திட்டான முகப்பருவில் காதல் கொண்டேன்
புன்கையில் சிரிக்கின்ற இதழ்கள் விட்டுப்
மென்னகத்தைக் கடிக்கின்ற பற்கள் பார்ப்பேன்
அன்புமொழி உன்பேச்சு ஆசை ஆனால்
ஆத்திரத்தில் கத்துவதைக் கேட்க நிற்பேன்
மடித்துத்தந்த கடிதத்தால் வளர்ந்த தல்ல
கடித்துத்தந்த கண்டோசால் வளர்ந்த காதல்
எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாய் என்ன செய்ய
கடித்துக்கொடு இதயத்தில் பாதி ஏனும்
முடித்துக் கொள்வோம் காதலினை முழுமையாக