இந்தப் பழம் புளிக்கும்!
வெட்டாத முள்மரத்தில் பூத்துக் காய்த்து
வெளியாலே தெரிந்தாலும் எனக்கு மட்டும்
எட்டாத பழமாக இருந்தாள் தன்னை
ஏணிவைத்தும் தோற்றதனால் புளிக்கும் என்றேன்
கட்டாமல் எடுத்துண்ட நண்பன் வந்து
கற்கண்டாய் இனித்ததடா நண்பா என்றான்
கிட்டாமல் போனதெலாம் புளிக்கும் வாழ்வில்
கிடைக்காமல் போனதுவும் புளிக்கும் என்றால்
முட்டாளா நானில்லை அவனைப் போல
முள்கிழித்த காயமெந்தன் உடலில் இல்லை!
இரா.சம்பந்தன்