ஆண்டவன் அருகே விளக்கு
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால் மட்டும் போதுமா? திரி வேண்டும். திரி மட்டும் போதுமா? பற்ற வைத்தால் தானே வெளிச்சம் கிடைக்கும்! வெளிச்சம் இருந்தால் தானே கடவுள் தெரிவான்! அது போல நமக்கும் கடவுளைப் பற்றி யாராவது விளக்க வேண்டும். அந்த விளக்கத்தோடு நாம் கடவுளைத் தேடித் திரிய வேண்டும்! திரிந்தால் மட்டும் போதுமா? பற்று வைக்க வேண்டும்! பற்று வைத்தால் மனத்திலே வெளிச்சம் வரும்! அப்போது கடவுள் தெரிவான்! அதை விளக்கத் தான் மின்சார விளக்குகள் இருந்தாலும் எண்ணெய்த் திரி விளக்கு ஏற்றப்படுகின்றது!
– வாரியார் பேருரைரை